ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்​தைக் கண்​டித்து பள்ளி மாண​வர்​கள் போராட்​டம்

உளுந்​தூர்​பேட்டை அருகே பள்​ளி​யில் ஆசி​ரி​யர்​கள் பணி​யிட மாற்​றத்தை கண்​டித்​தும்,புதிய ஆசி​ரி​யர்​களை உட​ன​டி​யாக பணி​யில் சேர வலி​யு​றுத்​தி​யும் மாண​வர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.

உளுந்​தூர்​பேட்டை வட்டம், திரு​நா​வ​லூர் ஒன்​றி​யம், செம்​ம​ணந்​தல் கிரா​மத்​தில் ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்ளி செயல்​பட்டு வரு​கி​றது.இங்கு 150-க்கும் மேற்​பட்ட மாணவ, மாண​வி​கள் பயின்று வரு​கின்​ற​னர்.

தலை​மை​யா​சி​ரி​யர் உள்​பட 9 ஆசி​ரி​யர்​கள் பணி​யாற்றி வந்​த​னர். பள்​ளி​யில் பணி​பு​ரி​யும் தலை​மை​யா​சி​ரி​யர், உதவி ஆசி​ரி​ய​ருக்கு இடையே கருத்து வேறு​பாடு கார​ண​மாக ஆசி​ரி​யர்​க​ளுக்கு இடையே தக​ராறு ஏற்​பட்​டது.இதை​ய​றிந்த உதவி தொடக்​கக் கல்வி அலு​வ​லர் செல்​வ​ராஜ் ஒரு வாரத்​துக்கு முன்பு பள்​ளிக்​குச் சென்று ஆசி​ரி​யர்​க​ளி​ட​மும், மாணவ, மாண​வி​கள்மற்​றும் பொது​மக்​க​ளி​டம் விசா​ரணை நடத்தி, அதன்​பே​ரில் 9 ஆசி​ரி​யர்​களை பணி​யி​ட​மாற்​றம் செய்து உத்​த​ர​விட்​டார்.

இதைக் கண்​டித்​தும், புதிய ஆசி​ரி​யர்​களை பணி​யில் விரைந்து சேர வலி​யு​றுத்​தி​யும் பள்​ளி​யி​லுள்ள நாற்​கா​லி​கள், பெஞ்​சு​கள், மேஜை​களை தூக்​கிப் போட்டு மாண​வர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.தக​வ​ல​றிந்த உதவி தொடக்​கக் கல்வி அலு​வ​லர்​கள்செல்​வ​ராஜ், பழ​னி​முத்து மற்​றும் போலீ​ஸார் சம்​பவ இடத்​துக்கு விரைந்து வந்து மாண​வர்​கள், பொது​மக்​க​ளி​டம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னர்.அப்​போது, பள்​ளிக்கு புதிய ஆசி​ரி​யர்​களை நிய​ம​னம் செய்​வ​தா​க​வும், அது​வரை தாற்​கா​லிக ஆசி​ரி​யர்​கள் 6 பேரை நிய​மிப்​ப​தா​க​வும் அதி​கா​ரி​கள்​உ​று​தி​ய​ளித்து மாண​வர்​க​ளின் போராட்​டத்தை கைவி​டச் செய்​த​னர்.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!