உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்தி!

தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-* நிலுவையிலுள்ள பல்வேறு வழக்குகளாலும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறைப் பணிகளைதமிழ்நாடு எல்லை வரையறை ஆணையம் செய்து கொண்டிருப்பதாலும், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்த பின்னரே, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட இயலும். எனினும், வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் செலவினங்களுக்காக ரூ.172.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2018-2019-ம் ஆண்டிற்கு, மாநில நிதிக்குழுவின் பரிந்துரைப்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,980.33 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,834.75 கோடியும் பகிர்ந்தளிக்கப்படும். அதேபோல் மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,975.07 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,877.10 கோடியும் பகிர்ந்தளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!