கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் ேததி, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடைவிதித்தது. தமிழக தலைமை செயலாளர் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண அறிவுறுத்தியது. ஆனால் அரசு அதை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னை புதுப்பேட்டை லாங்ஸ்கார்டன் சாலை சந்திப்பில் இருந்து எழும்பூர் வரை பேரணியாக சென்றனர்.இதுதொடர்பாக பேரணியில் பங்கேற்ற அரசு ஊழியர் பொது செயலாளர் அன்பரசு கூறியதாவது: புதிய பென்சன் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனே களைய வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், உள்ளிட்டவர்களுக்கு தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment