வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
'வங்கிகளுக்கு, தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை இல்லை; 31ம் தேதி, வழக்கம் போல் இயங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வங்கிகளுக்கு, வாரந்தோறும், இரண்டாவது, நான்காவது சனிக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி, நிதியாண்டு நிறைவு உட்பட காரணங்களால், வரும், 29 முதல், ஏப்., 2 வரை, ஐந்து நாட்களுக்கு, வங்கி களுக்கு தொடர் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.
வரும், 29, 30ம் தேதி விடுமுறை; 31ல், வங்கி கணக்கு முடிப்பு என்றாலும் கூட, அன்று வழக்கம் போல், வங்கி செயல்படும் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி - கனரா, மேலாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் தவறானது. கடந்த காலங்களில், கணக்கு முடிப்பு என்பது, வங்கி கிளை வாரியாக நடந்தது. தற்போது, அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதால், வங்கி தலைமை, மண்டலங்கள் இடையே, கணக்கு முடிப்பு பணி நடக்கிறது; இதற்கு விடுமுறை அளிக்கும் நடைமுறை மாறிவிட்டது.ஏப்., 2ல், கணக்கு முடிப்பு விடுமுறை அளிக்க, வங்கியாளர் சங்கங்கள், ரிசர்வ் வங்கியிடம் மனு அளித்துள்ளன; இதுவரை, ரிசர்வ் வங்கி, விடுமுறை அறிவிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment