இயற்பியல், பொருளியலில் கேள்விகள் கடினம் : பிளஸ் 2 மாணவர்கள், 'சென்டம்' பெற முடியுமா?

பிளஸ் 2 இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வில், ஐந்து கேள்விகளை தவிர, மற்ற கேள்விகள் எளிமையாக இருந்தன என, மாணவர்களும், ஆசிரியர்களும் தெரி வித்தனர்.

அதே நேரம், 'சென்டம்' எண்ணிக்கை பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல் தேர்வும், வணிகவியல் மாணவர்களுக்கு பொருளியல் தேர்வும் நடந்தது.

கையேடு : இதில், இயற்பியலில், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளே, வினாத்தாளில் அதிகமாக இடம் பெற்று இருந்தன. அதேபோல், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச கற்றல் கையேடு என்ற புத்தகத்தில் இருந்தும், 65 சதவீத கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பொருளியல் தேர்வில், பிரிவு, 'அ' வைதவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும், எளிமையான வினாக்கள் இருந்தன. பிரிவு, 'அ' வில், ஒரு மதிப்பெண் கேள்விகள், மாணவர்களை நீண்ட நேரம் யோசிக்க வைத்தன. இதனால், அப்பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியவில்லை என்றனர்.பொருளியல் தேர்வு குறித்து, சென்னையில் உள்ள, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி, பொருளியல் ஆசிரியர், ஏ.பி.பழனி கூறியதாவது:கல்வித்துறை, 'ப்ளூ பிரின்ட்'டில் இருந்து, மாறாமல் வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது.

சோதனை : ஒன்று, 10, 11, 13 மற்றும், 14வது கேள்விகள், மாணவர்களின் சிந்தனைத் திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. தேர்வு விதிகளின்படி, விடை திருத்தத்தில், 'சென்டம்' வழங்கும் முன், மாணவர்களின் கல்வித்தரத்தை சோதிக்க, சில சிக்கலான கேள்விகள் இடம் பெறும்.அதேபோல, சில, 'டுவிஸ்ட்' கேள்விகள் இருந்தன. மேலும், பாடத்தின் பின்பக்கத்தில் உள்ள உதாரண கேள்விகளும், அதிகமாக இடம் பெற்றதால், மாணவர்களின் தேர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

முதல் கேள்விக்கு, 'இரண்டு' விடைபொருளியல் தேர்வில், ஒன்றாம் எண்ணில் இடம் பெற்ற, 'பொருளியல் குறிப்பிடுவது...' என்ற, ஒரு மதிப்பெண் கேள்விக்கு, சரியான விடையை கண்டுபிடிக்க, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன. அவற்றில், மனித விருப்பமும், நிறைவடைதலும் என்ற குறிப்பும், செல்வத்திற்கும் சேமிப்பிற்கும் உள்ள தொடர்பு என்ற குறிப்பும், சரியான விடையாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர். எனவே, இந்தஇரண்டில், எந்த பதிலை எழுதினாலும், மதிப்பெண் தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

காப்பியடித்த 44 பேர் சிக்கினர் :

இயற்பியல் மற்றும்பொருளியல் தேர்வில், காப்பி அடித்ததாக, நேற்று மாநிலம் முழுவதும், 44 பேர் சிக்கினர். இதில், மதுரை, 5; கோவை, 3; கிருஷ்ணகிரி, 1; திருச்சி, 4; விழுப்புரம், 8; திருவண்ணாமலையில், 5 பேர் என, 26 பேர் பிடிபட்டனர். வேலுார், 3; திருவண்ணாமலை, 11; விழுப்புரம், 3; மதுரையில், 1 என, 18 தனித்தேர்வர்கள் உட்பட, மொத்தம், 44 பேர் காப்பியடித்து, சிக்கினர். இந்த ஆண்டு, இதுவரை நடந்த தேர்வுகளில், நேற்று தான் அதிக மாணவர்கள் காப்பியடித்து சிக்கியுள்ளனர்

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!