200 பள்​ளி​கள் தரம் உயர்த்​தப்​ப​டும்: பள்ளி கல்​வித் துறைக்கு ரூ.27,205 கோடி

2018-19-ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர் நிலைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும் என தமி​ழக அரசு அறி​வித்​துள்​ளது.


இது​போல பல்​வேறு திட்டங்​க​ளுக்​காக 2018-19 நிதி​நிலை அறிக்​கை​யில் பள்​ளிக் கல்​வித் துறைக்​காக மட்டும் ரூ. 27 ஆ​யி​ரத்து 205 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
இது தொடர்​பாக தமி​ழக அர​சின் நிதி​நிலை அறிக்​கை​யில் வெளி​யி​டப்​பட்​டுள்ள அறி​விப்​பு​கள்:
2018-19 ஆம் ஆண்​டில் 100 நடு​நி​லைப் பள்​ளி​கள் உயர்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும், 100 உயர்​நி​லைப் பள்​ளி​கள் மேல்​நி​லைப் பள்​ளி​க​ளா​க​வும் தரம் உயர்த்​தப்​ப​டும். பள்​ளிக்​குச் செல்​ல​வில்லை எனக் கண்​ட​றி​யப்​பட்​டுள்ள 33,519 குழந்​தை​களை 2018-2019-ஆம் ஆண்​டில் பள்​ளி​க​ளில் சேர்க்க நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும்.
​உள்​கட்​ட​மைப்பு வச​தி​க​ளுக்கு நிதி​: பள்​ளி​க​ளில் உள்​கட்​ட​மைப்பு வச​தி​களை மேம்​ப​டுத்த நிதி​நிலை அறிக்​கை​யில் ரூ. 333.36 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​சீ​ரு​டை​கள், சைக்​கிள் வழங்​கும் திட்டங்​க​ளுக்கு ரூ. 1,600 கோ​டி:​ பள்ளி மாண​வர்​க​ளுக்கு நான்கு இணை சீரு​டை​கள், புத்​த​கப் பைகள், கால​ணி​கள், பாடப் புத்​த​கங்​கள், நோட்டுப் புத்​த​கங்​கள், வடி​வி​யல் பெட்டி​கள், சைக்​கிள் மற்​றும் பேருந்​துக் கட்ட​ணச் சலு​கை​கள் விலை​யில்​லா​மல் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்​தத் திட்டங்​க​ளுக்​காக 2018-19-ஆம் ஆண்​டில் ரூ.1,653.89 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
மேலும், பள்ளி இடை​நிற்​ற​லைக் குறைப்​ப​தற்​காக பத்​தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாண​வர்​க​ளுக்​கான ரூ. 5000 ஊக்​கத் தொகைத் திட்டத்​துக்​காக நிதி​நிலை அறிக்​கை​யில் ரூ. 313.58 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​ம​டிக்​க​ணினி திட்டத்​துக்கு ரூ. 758 கோ​டி:​ பள்​ளி​க​ளில் கற்​பிக்​கும் முறையை மேம்​ப​டுத்​தும் வகை​யில் இணை​ய​வழி மூலம் கற்​கும் வகுப்​ப​றை​கள் ஏற்​கெ​னவே 770 பள்​ளி​க​ளில் நிறு​வப்​பட்​டுள்​ளன.
இந்த நிதி​யாண்​டில் 3,090 உயர்​நி​லைப் பள்​ளி​க​ளி​லும், 2,939 மேல்​நி​லைப் பள்​ளி​க​ளி​லும் ரூ. 462.60 கோடி செல​வில் 10 முதல் 20 கணி​னி​க​ளு​டன் கூடிய உயர் தொழில்​நுட்ப ஆய்​வ​கங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.
பள்ளி மாணவ, மாண​வி​க​ளுக்கு மடிக்​க​ணினி வழங்​கு​வ​தற்​காக இந்த நிதி​யாண்​டில் ரூ. 758 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அனை​வ​ருக்​கும் கல்வி இயக்​கத்​துக்கு ரூ.1,750 கோ​டி​யும், அனை​வ​ருக்​கும் இடை​நி​லைக் கல்வி இயக்​க​கத்​துக்கு ரூ. 850 கோ​டி​யும் இந்த நிதி​யாண்​டில் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. குழந்​தை​க​ளுக்​கான இல​வச மற்​றும் கட்டா​யக் கல்வி உரி​மைச் சட்டத்தை' திறம்​ப​டச் செயல்​ப​டுத்த ரூ.200.70 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.
​மொத்​தம் ரூ. 27,205.88 கோ​டி:​ பள்​ளிக் கல்​வித் துறை​யில் பல்​வேறு திட்டங்​க​ளுக்​காக 2018-19-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்​கை​யில் ரூ. 27,205.88 கோ​டியை தமி​ழக அரசு ஒதுக்​கீடு செய்​துள்​ள​து.

Comments

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்