"பிளஸ் 1 மாணவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் தேர்வு வேண்டும்" - அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கல்வியாளர்கள்!

தற்பொழுது பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத சூழல் உள்ளது. 

இதனால் இவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இது குறித்து பேசிய கல்வியாளர்கள், "நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு முன் கூட்டியே அறிவித்தது.

ஆனால் இதற்கான ஏற்பாடுகளில் திறமையாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை. மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற எந்த வழிகாட்டுதலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. கேள்வித்தாள் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரி முன்கூட்டியே வழங்கப்படவில்லை. மிகவும் காலதாமதாகவே கேள்வித்தாள் மாதிரி வழங்கினார்கள்.

இதனை பயன்படுத்தி மாணவர்களை புதிய தேர்வு முறைக்கு தயார் செய்வதில் பல்வேறுவிதமான சிரமங்கள் இருந்தன. இதனால், தற்பொழுது பிளஸ் 1 மாணவர்கள் பெரும் சிரமத்துடன் தேர்வை சந்தித்துள்ளார்கள். எனவே மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள தமிழக அரசு, பிளஸ் 1 மாணவர்களை இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என்றனர்.

Comments

  1. கண்டிப்பாக இதை அரசின் கவனத்திற்க்கு எடுத்து சென்று மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்