TNPSC - அரசு பணியாளர்கள் தேர்வுக்கான நேர்காணலில் புதிய முறை அறிமுகம்!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி) மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில், பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு நேர்காணல் (இன்டர்வியூ) மூலம் சரியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவது வழக்கம்.அரசு பணிகளுக்கான பணியாளர்களின், நேர்காணல்களை டி.என்.பி.எஸ்.சி தலைவர் உள்ளிட்ட தேர்வாணைய குழு உறுப்பினர்கள் மேற்கொள்வது தான் வழக்கம். அதில் இரு குழுக்களாக அவர்கள் பிரிந்து செயல்படுவார்கள்.


இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.அதன்படி இனி அரசு பணியாளர்களின், குறிப்பிட்ட நேர்காணலை நடத்தவுள்ள தேர்வாணைய குழு உறுப்பினர்கள்குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படுவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதிலும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் எந்தக் குழுவில் இடம்பெறுவார் என்பதும் குலுக்கல் மூலமே தேர்வு செய்யப்படும்.இதன்மூலமாக நேர்காணல்களில் வெளிப்படைத்தன்மையை கைக்கொள்ள முடியும் என்று நம்புவதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்