TET - ஆசிரியர் தகுதி தேர்வு அரசாணை ஒரு பார்வை!
அரசு பள்ளிகளில் ஆண்டு தோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு பணிநாடுபவர்களுக்கு போட்டித் தேர்வினை தனியாகவும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
*இது ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் உள்ள முறை.
*இதன்படி இனி வெயிட்டேஜ் முறை கிடையாது.
*ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நியமன தேர்வை எழுதி வெற்றி பெற்றால் அவர்களுக்கு பணி கிடைக்கும்.
* இனி ஆசிரியர் தகுதி தேர்வு என்பது நியமன தேர்வு எழுதுவதற்கான தகுதி தேர்வு மட்டுமே.
* ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி ஏழு ஆண்டு செல்லுபடியாகும். மதிப்பெண்களை அதிகரிக்க மீண்டும் மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.
7 ஆண்டுகள் முடிவடைந்து விட்டால் நியமன தேர்வில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுமா..? தகுதி அடைந்தவர்கள் திரும்ப திரும்ப எதற்காக தகுதி தேர்வு எழுத வேண்டும்? நெட் மற்றும் செட் தேர்வுகள் போல ஒருமுறை போதுமல்லவா..
ReplyDeleteநான் 2013 இல் 89 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தேன். 4 ஆண்டுகள் கழிந்து விட்டது...இன்னும் 3 ஆண்டுகள் தான் உள்ளது. 7 ஆண்டுகள் விதிமுறை எனில்... இந்த மூன்று ஆண்டுகளில் நியமன தேர்வு மூலம் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் நான் திரும்ப எதற்காக தகுதி தேர்வு எழுத வேண்டும்.. ஏற்கனவே அடைந்த தகுதி போதுமே..
ReplyDelete