NEET தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை

நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத்
தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




'நீட்' தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் முழு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், பிறந்த நாள், இ - மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது.
இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு எழுதியோரின் அலைபேசி எண்களின் முதல் மூன்று எண்கள் மட்டுமே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோர், பணம் செலுத்தி, மொத்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.'நீட்' தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்