ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு   ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம், எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாயாகவும், மற்ற பிரிவினருக்கு500 ரூபாயாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சட்டகல்லுாரிகளில்  உதவி பேராசிரியர் போட்டி தேர்வு அறிவிப்பில் கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினருக்கானகட்டணம் 250 ரூபாயில இருந்து, 300 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 500 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைன்வழி பதிவு உள்ளிட்ட பணிகள் நடைபெறும் நிலையில், தேர்வுகட்டணங்களை குறைக்குமாறு வலியுறுத்தும் நிலையில், கட்டணஉயர்வால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Comments