பள்ளிக்கல்வி இயக்குனராக ராமேஸ்வரமுருகன் நியமனம்: அரசாணை வெளியீடு


பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் நேற்று ஓய்வுபெற்றதையடுத்து ராமேஸ்வரமுருகன் தமிழக அரசால் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன் நேற்று ஓய்வு பெற்றார்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வரும் ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 


பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் நேற்றுடன் ஓய்வு பெற்றார். தற்போது மத்திய இடைநிலை கல்வி திட்டத்தின் இயக்குனராக உள்ள ராமேஸ்வரமுருகன் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

2014ம் ஆண்டு இவர் ஏற்கனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ஜூலை 1ம் தேதி முதல் காலியாக உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்துக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் கூடுதல் இயக்குனராக பணிபுரியும் ராமேஸ்வரமுருகனை பணியமர்த்தி அரசு ஆணையிடுகிறது. என்று கூறப்பட்டுள்ளது. 

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்