சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பள்ளி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில், 1,325 சிறப்பாசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்கு, செப்டம்பர், 23ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில், 35 ஆயிரத்து, 781 பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள், ஜூன், 14ல், வெளியிடப்பட்டன.இதை தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்காக, தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று வெளியிட்டது.தேர்வானவர்களுக்கு, ஆக., 13ல், மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments