''கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வகுப்பறையில் ஆசிரியர்களை காட்டிலும் மாணவர்களின் பங்களிப்பு, அதிகமாக இருக்க வேண்டும்

''கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வகுப்பறையில் ஆசிரியர்களை காட்டிலும் மாணவர்களின் பங்களிப்பு, அதிகமாக இருக்க வேண்டும்,

'' என, ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகடமி இயக்குனர், மர்மர் முகோபாத்யாய் கூறினார்.தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், 'பயன்பாடு சார்ந்த கல்விமுறை' என்ற தலைப்பில், மாநில அளவிலான இரண்டு நாள் பயிலரங்கு, கோவையில் நேற்று துவங்கியது. ௪௮.௯ சதவீதம்சங்க தலைவர், கலீல் தலைமை வகித்து பயிலரங்கை துவக்கிவைத்தார்.இதில், ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகடமி இயக்குனர், மர்மர் முகோபாத்யாய் பேசியதாவது:நம் நாட்டின் உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை விகிதம், 25.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில், 48.9 சதவீதமாக உள்ளது. இதற்கு, தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. சேர்க்கை விகிதத்துடன், பயன்பாடு சார்ந்த கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியது அவசியம்.தனியார் கல்வி நிறுவனங்களிடம், பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் என்பது சமநிலையில் வைத்து மதிப்பீடு செய்ய இயலாது.பாடத்தை கற்பிக்கும் ஆசிரியரின் தன்மை, ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், கற்கும் மாணவர்களிடம் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இதை, ஆசிரியர்கள் புரிந்து, கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.சாத்தியப்படும்கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட வகுப்பறையில், ஆசிரியர்களின் பங்களிப்பே அதிக அளவில் உள்ளது.ஆனால், ஆசிரியர்களின் பங்களிப்பு, 25 சதவீதமாகவும், மாணவர்களின் பங்களிப்பு, 75 சதவீதமாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் வகுப்பறை ஈடுபாடு இணைந்து இருந்தால் மட்டுமே, பயன்பாடு கல்விமுறையை சாத்தியப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.விழா மலரை, கோவை ஏ.ஜே.கே., கல்லுாரி செயலர் அஜித் குமார் லால் மோகன் வெளியிட்டார்.இன்று நடக்கவுள்ள இரண்டாம் நாள் பயிலரங்கில், வல்லுனர்கள் பலர் பேசவுள்ளனர்.துவக்கவிழா நிகழ்ச்சியில், டில்லி உயர்கல்வித்துறை தலைவர் பேராசிரியர் சுதான்சு பூஷன், சங்க பொருளாளர் நித்யானந்தம், இணை செயலர் பரத்குமார் ஜெகமணி மற்றும் தமிழகத்தின் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Comments