உடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க எளிய வழி இதோ!




தொப்பையை குறைக்க இன்றைய
இளைஞர்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை இடைவெளியின்றி பின்பற்றிவந்தால் தொப்பையை சீக்கிரமே குறைத்துவிடலாம்.

உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு அருகம்புல் மிக சிறந்த மூலிகை. அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.


முதல்நாள் இரவே அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் ஓமத்தை பொடிசெய்து போட வேண்டும். இந்த கலவையை ஒரு குவளை நீரில் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கிவிடவும். பின்பு அதை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.


மறுநாள் காலை அதை நன்றாக சாறுபிழிந்து சக்கையை நீக்கிவிட வேண்டும். இந்த சாறை தினமும் இதே போல் தயார் செய்து பத்து நாட்கள் வேறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை வற்றிவிடும்.
தேவையற்ற கொழுப்பை குறைக்க கேரட்டை சாறெடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவாக கொழுப்பு குறைந்து உடல் மெலியும்.


இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.


வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும். (குறிப்பு : கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்)

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!