அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது : அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் நடைபெறும் சுதந்திர விழாவில் மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு குள்ளம்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மருத்துவதுறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழகம் திகழ்வதாக செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்தார்.


 மேலும் பேசிய அவர் பள்ளி கல்வித்துறையில் விரைவில் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக தெரிவித்த அவர், விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். இயங்காமல் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

வருடத்திற்கு 3 முறை ஆசிரியர் - பெற்றோர் கூட்டங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆண்டுதோறும் அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை அமைச்சர் செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார். அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்றும், சுத்தமாக வைத்திருக்கும் பள்ளிகளுக்கு புதுமை விருது மற்றும் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Comments