விற்பனைக்கு வந்த ‘தூய்மையான காற்று’ விலை ரூ.650




நாடு முழுவதும் காற்றின் மாசு அதிகரித்து வரும் நிலையில் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் தூய்மையான காற்று என்ற பெயரில் ஆக்சிஜன் கேன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஒருசில இணையதள வணிக நிறுவனங்களும் இது போன்ற விற்பனைகளை மேற்கொண்டு வருகின்றன. டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிகப்படியான காற்று மாசு உள்ளதாக ஆய்வுகள் தொிவித்துள்ளன.

சென்னை தியாகராய நகரில் உள்ள பூங்கா ஒன்றின் வாயிலில் கேன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவை என்ன என்று பொதுமக்கள் கேட்டனா். அதற்கு விற்பனையாளா்கள் தூய்மையான காற்று என்று தொிவித்தனா். இதனை கேட்ட மக்கள் வியப்புடன் பாா்த்து சென்றனா்.

விற்பனையாளா்கள் கூறுகையில் கேன் ஒன்றின் விலை ரூ.650. இதனை சுவாசக் கோளாறு உள்ளவா்கள், சிறுவா்கள், பெரியவா்கள் என அனைவரும் பயன்படுத்தலாம் என்று தொிவித்துள்ளனா்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்