5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மஹாராஷ்டிராமாநிலம் புனேயில் கூறியதாவது:மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில்,
'ஆல் பாஸ்' நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் மறு தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட திருத்த மசோதா, விரைவில் நிறைவேற்றப்படும், என்றார்.
Comments
Post a Comment