குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு!!!
அரசு துறையில் பல்வேறு பணிகளுக்காக, 20 லட்சம் பேர் எழுதிய, 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஐந்து மாதங்களாக வெளியாகாததால்
, தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு துறைகளில், காலி பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த வரிசையில், குரூப் - 4 பதவியில் அடங்கிய, 9,351 காலி பணியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, பிப்., 11ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.இதில், முதல்முறையாக, கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவியில், 494 இடங்களையும் சேர்த்து, 4,096 இளநிலை உதவியாளர், 3,463 தட்டச்சர், 815 சுருக்கெழுத்தர், 156 வரைவாளர் உட்பட, மொத்தம் எட்டு வகை பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வுக்கு, 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 20.69 லட்சம் பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு முடிந்து, ஐந்து மாதங்களைத் தாண்டியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இது குறித்து, தேர்வர்கள் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் சேர்க்கப்பட்டு, வழக்கத்தை விட தாமதமாகவே இந்த ஆண்டு, குரூப் - 4 தேர்வு நடத்தப்பட்டது. அதிலும், விடை திருத்தம் முடிந்து, விரைவில் தேர்வு முடிவுகள் வரும் என, எதிர்பார்த்தோம். ஐந்து மாதங்களாக காத்திருந்தும், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், அடுத்த தேர்வுக்கு தயாராவதிலும், தேர்வர் களுக்கு சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே, தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments
Post a Comment