TET : ஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - முழு விளக்கம்!





அரசு பள்ளி ஆசிரியராக வேண்டும் என்றால் இனி இரு தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண்களை கொண்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவதால் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. 

இதையடுத்து இரு தேர்வுகளை நடத்த மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய கூட்டத்தின் பரிந்துரை செய்தது. இதையடுத்து அந்த பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வை தனியாகவும் நியமனத்துக்கான போட்டி தேர்வையும் தனித்தனியாக நடத்துவது என்று அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையை தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டது. போட்டி தேர்வு எழுதுவதற்கு தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.




*இது ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் உள்ள முறை.

*இதன்படி இனி வெயிட்டேஜ் முறை கிடையாது.

*ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நியமன தேர்வை எழுதி வெற்றி பெற்றால் அவர்களுக்கு பணி கிடைக்கும்.

* இனி ஆசிரியர் தகுதி தேர்வு என்பது நியமன தேர்வு எழுதுவதற்கான தகுதி தேர்வு மட்டுமே.

* ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி ஏழு ஆண்டு செல்லுபடியாகும். மதிப்பெண்களை அதிகரிக்க மீண்டும் மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.





ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு மற்றும் போட்டித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி 2 தேர்வுகள் நடத்தப்படும். அதேபோல் போட்டி தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது

Comments