கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு அதிகாரிகளுக்கு வாகனம் கொடுக்காமல் அரசு மெத்தனம்

புதிதாக நியமிக்கப்பட்ட 128 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு வாகனம் ஒதுக்கீடு செய்யாததால் ஆய்வுப்பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தமிழக பள்ளிக் கல்வியில் நிர்வாக சீர்திருத்தம் செய்வதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அதிக அளவில் அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 68 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடம் 128 இடங்களாக உயர்த்தப்பட்டு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் மாவட்டங்களில் உள்ள தொடக்க  மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிப்பது, மாறுதல் உத்தரவுகள் பிறப்பிப்பது, பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்வது என பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்ய உள்ளனர். இது தவிர பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை மேற்பார்வையிடவும் உள்ளனர். 

புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு அரசு பள்ளியை தேர்வு செய்து அதில் அவர்களுக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய வசதியாக வாகனங்கள் ஒதுக்கீடு செய்யவில்லை. 

அதனால், மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தொடக்க கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் விரைவில் வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்