12 ராசிகளுக்கான சந்திர கிரகண ராசிபலன்கள்


இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வின் போது பிளட் மூன் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

இந்த சிறப்பு நாளில் உங்களின் ராசிபலன்களை அறிந்து கொள்ளுதல் உங்களின் எதிர்காலத்திற்கு சிறப்பாக அமையும்.  எப்போது தொடங்குகிறது சந்திரகிரகணம் ?

சந்திர கிரகணம் ராசி பலன்கள்
மேஷம் (Aries)
சந்திர கிரகணம், ராசி பலன்கள்


தலைமைப் பண்புகள் அதிகம் கொண்டுள்ள உங்களுக்கு இந்த சந்திர கிரகணம் அதிக நன்மையினை அளிக்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

ரிஷபம் (Taurus)
சந்திர கிரகணம், ரிஷப ராசி 

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் சார்ந்த பிரச்சனைகளை குடும்பத்தில் இருந்து விலக்கி வைப்பது நல்லது. இந்த சந்திர கிரகண நிகழ்வு உங்களை பலவீனம் அடைய வைக்கும்.

மிதுனம் (Gemini)
சந்திர கிரகணம், ராசி பலன் 

ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களிடையேயான பேச்சு வார்த்தையை பொறுமையுடன் கையாள வேண்டும். உங்கள் நண்பர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நீங்கள் அதிகம் உதவி செய்வீர்கள்.

கடகம் (Cancer)
சந்திர கிரகணம், ராசி பலன்கள்

திருமணமானவர்களின் குடும்ப உறவில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். உங்கள் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவீர்கள். சொத்து தொடர்பாக நல்ல செய்திகள் வந்து சேரும்.


சிம்மம் (Leo)
சந்திர கிரகணம், ராசி பலன்கள்

தனிப்பட்ட வாழ்விலும், அலுவலகம் அல்லது தொழில் ரீதியிலும் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் வெற்றிக்கான இலக்கினை அடைவீர்கள். பணம் தொடர்பாக நீடித்து வந்திருந்த பிரச்சனைகள் இன்று முடிவிற்கு வரும்.

கன்னி (Virgo)
சந்திர கிரகணம், ராசி பலன்கள்
பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வெகுநாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வாழ்வு முறை மாற்றம் அடைந்திருக்கும். காதல் விவகாரங்களில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.

துலாம் (Libra)
சந்திர கிரகணம், ராசி பலன்கள் 

உங்கள் தாயாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவீர்கள். புதிதாக நிறைய பிரச்சனைகள் உருவாகும். உடல்நிலையை கவனித்துக் கொள்வது அவசியம்.

விருச்சகம் (Scorpio)
சந்திர கிரகணம், ராசி பலன் 


தனிப்பட்ட முறையிலும், அலுவல் ரீதியிலும் நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். செலவு அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடம் வாக்குவாதம் ஏற்படும். உங்களின் செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

தனுசு (Sagittarius)
சந்திர கிரகணம், ராசி பலன்கள் 

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த காரியங்கள் முடிவடையும். நிறைய பிரச்சனைகள் மற்றும் தடங்கல்கள் உருவாகும். பண ரீதியாக வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

மகரம் (Capricorn)
சந்திர கிரகணம் 

தனிப்பட்ட வாழ்விலும், அலுவல் ரீதியாகவும் பிரச்சனைகள் அதிகரித்த அளவில் இருக்கும். உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். பெரிய முடிவுகள் மற்றும் இடம் மாற்றம் தொடர்பாக தற்போது எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

கும்பம் (Aquarius)
சந்திர கிரகணம், ராசி பலன்கள்

பொறுமையினை கையாள வேண்டிய காலம் இது. எந்த விதமான சூழலிலும் பொறுமையை இழக்கவோ கோபம் அடையவோ கூடாது. அமைதியாக இருப்பது பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். தொலை தூர பயணங்களை தவிர்ப்பது நலம்.

மீனம் (Pisces)
சந்திர கிரகணம் 

எதிர் மறை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து விலகி நிற்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு செயல்படுங்கள். உறவுகளுக்குள் வரும் பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்