எங்க சார் TRANSFER வாங்கின நாங்க TC வாங்குவோம் - ஆசிரியரை இடமாற்றம் செய்வதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்



சரியான நேரத்துக்கு வந்தும் மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு உதவும் ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்கு எதிப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 281 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 23 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இங்கு, ஆங்கில ஆசிரியராக பகவான் பணியாற்றி வருகிறார். சிறப்பாக பாடம் நடத்தி வருவதால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பகவானுக்கு நல்லபெயர் உள்ளது. மேலும் மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்துவது, பள்ளி வளர்ச்சிக்கு தனிப்பட்ட முறையில் உதவுவது என்று இருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் திருவள்ளூரில் நேற்று நடந்த ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங்கில் கலந்து ெகாள்ள அவருக்கு கடிதம் வந்தது. அதன்படி கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அவர் நேற்று காலை திருவள்ளூர் சென்றார். இதனால் இடமாறுதல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்ற செய்தி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவியது.  

இதையறிந்த பெற்றோர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில், திடீர் என மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி நுழைவாயில் முன்பு பெற்றோருடன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘ஆசிரியர் பகவானை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது, மீறி மாற்றினால் பள்ளியில் இருந்து  டிசி வாங்கிக்கொண்டு வேறு பள்ளிக்கு செல்வோம்’’ என கூறி கோஷங்களை எழுப்பினர். 

இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆங்கில ஆசிரியர் பகவான் சிறப்பாக பாடம் நடத்தக்கூடியவர். 

அவர் இந்த பள்ளியில் நிரந்தரமாக இருப்பார் என்ற ெசய்தி கிடைத்தால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம்.  இல்லை என்றால் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தைத்  தொடர்வோம் என கூறி மாணவர்கள் பள்ளிக்குச் ெசல்லாமல் வீட்டிற்குச் சென்றனர். மாணவர்கள், பெற்றோர்களின் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நீடித்தது. 

Comments