செஸ் போட்டியில் மிக குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை!



செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையை சேர்ந்த பிரக்னாநந்தா என்ற சிறுவன் பெற்றுள்ளார்.


  சென்னையை சேர்ந்த ரமேஷ், நாகலட்சுமி தம்பதியரின் மகனான பிரக்னாநந்தா சென்னையில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 12 வயதான பிரக்ஞானந்தா, கடந்த 2013ம் ஆண்டில் 8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதனைதொடர்ந்து 2015ம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்தார். ஒரு கிராண்ட் மாஸ்டராக மாற மூன்று நிலைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு உலக ஜூனியர் சாம்பியியன்ஷிப் போட்டியில் வென்று தனது முதல் நிலையையும், கிரீஸ் நாட்டில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில் வென்று இரண்டாவது நிலையையும் எட்டினார்.

மேலும் கிராண்ட் மாஸ்டராக 2500 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தததையடுத்து, இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். அதில் 9வது சுற்றில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் உலகின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில், 2002ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2வது சிறுவன் எனும் பெருமையையும் பிரக்னாநந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரக்னாநந்தாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும இது குறித்து கருத்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட்மாஸ்டர் பட்டியில் இணைந்ததற்கு வரவேற்பும், பாராட்டும் பிரகனாநந்தா. விரைவில் நாம் சென்னையில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments