அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு, செய்ய வேண்டியது என்ன?

சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும் மாணவர்கள், தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஆன்லைனில் இருந்து பிரதி எடுத்து, அதில் கையெழுத்திட்டு, உதவி மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.


* 10ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 ஹால் டிக்கெட், மாற்று சான்றிதழான, டி.சி., - நிரந்தர ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

* தேவைப்படுவோர், இருப்பிட சான்றிதழ், இலங்கை அகதிகளுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், மாற்று திறனாளர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் மற்றும் நகல் எடுத்து செல்ல வேண்டும்.

Comments