அரசு பள்ளி மாணவர்களுக்கு மெட்ரோ ரயில்வே சார்பில் இலவச கல்வி சுற்றுலா


சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்ட்ரல்- விமான நிலையம், டி.எம்.எஸ் விமான நிலையம் வரையில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மெட்ரோ ரயிலின் கட்டமைப்பு, வசதிகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் அரசு பள்ளி மற்றும் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகளை இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இதை மெட்ரோ ரயில் நிர்வாகமே ஏற்பாடு செய்யும். 


இந்நிலையில், 2018-19ம் கல்வி ஆண்டிற்கான கல்வி சுற்றுலா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்வி சுற்றுலாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்ட்ரல்-விமான நிலையம், டி.எம்.எஸ்-விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

மெட்ரோ ரயில் அதிகாரிகள், மாணவர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மெட்ரோ ரயிலின் அமைப்பு, சிறப்பம்சம், மெட்ரோ ரயில் செல்லும் வேகம் ஆகியவற்றை தெளிவாக எடுத்துக்கூறினர்.

Comments

  1. நல்ல தொரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மெட்ரோஇரயில் நிர்வாகத்திற்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்