ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்வித்துறை!
இந்நிலையில் ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆசிரியர் பகவான். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 5 வருடமாக அங்கு பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் ஆசிரியர் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
இதனிடையே, ஆசிரியர் பகவான் இடமாறுதல் ஆக இருப்பது குறித்து தகவல் அறிந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் சோகம் அடைந்தனர். சிறந்த ஆசிரியரான பகவான் எங்கள் பள்ளியை விட்டு மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக கடந்த 20ஆம் தேதி பள்ளி வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் இந்த பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் மாணவர்களை ஆழக்கூடாது என ஆறுதல் படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த ஆசிரியர் பகவான் வெளியே செல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அவரை கட்டிப்படித்து கதறி அழுது துடித்தனர். இதனால் ஆசிரியார் பகவானும் செய்வதறியாது கண்ணீர் விட்டு அழுதார்.
வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார். மாணவர்களின் இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர். இதனால் ஆசிரியர் பகவான் பணிநிரவல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் பகவான் வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு???
ReplyDeleteஇந்த சட்டமாவது இவருக்கு செல்லுமா?
ஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு???
ReplyDeleteஇந்த சட்டமாவது இவருக்கு செல்லுமா?