'டிப்ளமா' ஆசிரியர் சேர்க்கை துவக்கம்

தொடக்க கல்வி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேருவதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. 8,478 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.



தமிழக பள்ளிக் கல்வித்துறையில் உள்ள, மாவட்ட கல்வியியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான, டிப்ளமா படிப்பு நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும், 38 அரசு கல்லுாரிகள், ஒரு அரசு உதவி கல்லுாரி மற்றும், 256 சுயநிதி கல்லுாரிகள் என, 295 கல்லுாரிகளில், 8,478 இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின், http://www.tnscert.org என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதி வரை, பதிவு செய்யலாம். இதற்கான விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்