பிளஸ் 1 புத்தகம் புதிய புத்தகங்கள் இன்று முதல் விற்பனை

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கான, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வகுப்புகளில், புதிய பாடத்திட்ட பயிற்சிகளும் துவங்கியுள்ளன.

பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட, பிளஸ் 1க்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்படுவது தாமதமானது. முடிந்த கல்வியாண்டில், பிளஸ் 1 பொது தேர்வில், மாணவர்களின் மதிப்பெண் குறைந்ததால், இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்புகள், முன்கூட்டியே துவங்கியுள்ளன. ஆனால், புத்தகங்கள் கிடைக்காமல், மாணவர்கள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், பிளஸ் 1 புத்தகங்கள், டிஜிட்டல் வடிவில், தமிழக பாடநுால் கழக இணையதளத்தில், சில தினங்களுக்கு முன் வெளியாகின. இதை தொடர்ந்து, புதிய புத்தகங்கள், இன்று விற்பனைக்கு வருகின்றன. 

தமிழக பாடநுால் கழக விற்பனை மையங்களில், புத்தகங்கள் கிடைக்கும். சென்னை, டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் உள்ள, தமிழக பாடநுால் கழக விற்பனை மையத்தில், சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.மேலும், https://textbookcorp.in என்ற இணையதளத்தில், ஆன்லைனிலும், 'புக்கிங்' செய்து, புத்தகங்களை வீட்டிலேயே, 'டெலிவரி' பெறலாம்.

Comments