தமிழகத்தில் இன்று (ஜூன் 15) பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு

ரம்ஜானுக்காக இன்று (ஜூன் 15) பள்ளி, அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால், நாளை (ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இன்று பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் புதுச்சேரியிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் எனவும், பள்ளி, அலுவலகங்கள் இன்று இயங்கும் எனவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்