நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடம்! தமிழகத்தில் இருந்து எத்தனை பேர் தகுதி?


நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடம் பிடித்துள்ளார். சென்னை: நீட் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா தேசிய அளவில் 12வது இடம் பிடித்துள்ளார்.


மே 6-ல் நடந்த இந்த நீட் தோ்வு நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா்.

தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.


ரிசல்ட் வெளியீடு
இந்தநிலையில் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12.30 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் சிபிஎஸ்இ வெளியிடப்பட்டது.


பீகார் மாணவி முதலிடம்
நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 691 மதிப்பெண் பெற்று பீகார் மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். ஓ.சி பிரிவுக்கு 119, ஓபிசி, எஸ்சி.எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


2,3 ஆம் இடங்கள்
தெலுங்கானாவை சேர்ந்த ரோகன் புரோஹித் 690 மதிப்பெண்களுடன் 2ஆம் இடத்தை பிடித்துள்ளார். டெல்லியை சேர்ந்த ஹிமான்ஸு சர்மா 690 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.


கீர்த்தனா 12வது இடம்
தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி தேசியளவில் 12ஆம் இடம் பித்துள்ளார். கீர்த்தனா 720க்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


39.35% தேர்ச்சி
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 45,336 பேர் தகுதி பெற்றுள்ளனர்.நீட் தேர்வில் தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 39.35% ஆகும்.


புதுச்சேரியில் 1768 பேர்
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1% அதிகம் ஆகும். புதுச்சேரியில் இருந்து 4462 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில் 1768 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

Comments