Today Rasipalan 17.5.2018

மேஷம் இன்று சூரியன் சஞ்சாரத்தால் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம் இன்று குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம் இன்று மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். சூரியனால் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கடகம் இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரிய ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

சிம்மம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கன்னி இன்று மற்றவர் பாராட்டு கிடைக்கும். கடன் பிரச்சனை தீரும். பணவரத்து அதிகரிக்கும். எதையும் நிர்ணயிக்கும் திறன் அதிகமாகும். மற்றவர்களுக்காக உதவி செய்யும் போது வீண்பழி சொல் கேட்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

துலாம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். சூரியன் சஞ்சாரத்தால் பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க நேரிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

விருச்சிகம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செய்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவ தன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்வது நல்ல பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு இன்று எதிலும் நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறமை குறையும். அடுத்தவர் பிரச்சனை தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்தவரை நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். குடும்ப பிரச்சனைகள் தீரும். மனகவலை அகலும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம் இன்று ராசியாதிபதி சனியின் பார்வையால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5


கும்பம் இன்று தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்க பெறுவார்கள். புத்தி சாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம் இன்று குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்