"WHATSAPP" ற்கு போட்டியாக களமிறங்கிய பதஞ்சலி.. வெளியானது Kimbho Messaging App




பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி என்கிற நிறுவனத்தை 2006ம் ஆண்டு துவக்கினார். இந்த நிறுவனம் FMCG பொருட்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம் பி எஸ் என் எல் நிறுவனத்துடன் இணைந்து 'சுதேசி சம்ரிதி' என்கிற பெயரில் சிம் கார்டை அறிமுகப்படுத்தியது. விரைவில் இந்த சிம் கார்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 144 மாதக் கட்டணத்தில் அன்லிமிட்டெட் கால்கள் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்கே திஜாராவாலா தெரிவித்துள்ளார்.

Comments