JIO : இளங்கலை மாணவர்களுக்கு டிஜிட்டல் சாம்பியன்ஸ் திட்டம் அறிமுகம்
ஜியோ நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டிஜிட்டல் சாம்பியன்ஸ் எனப்படும் ஐந்து வாரம் மாணவர் கற்றல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் காலகாட்டத்தில் தேவைக்கேற்றவாறு தொழில் சார்ந்த டிஜிட்டல் டெக்னாலஜிகளை அதிகரிக்க இன்றைய இளைஞர்களின் அறிவை மேம்படுத்தும் நோக்கமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்களுடன் டிஜிட்டல் தீர்வுகள் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொண்டு, அவர்களை டிஜிட்டல் சாம்பியன்களாக உருவாக்கி, அவற்றின் வளர்ச்சியை நாட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
டிஜிட்டல் சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ், ஜியோ நாடு முழுவதிலும் இருந்து நான்கு குழுக்களை தேர்வு செய்ய உள்ளது. இதன் முதல் குழு மே 21ம் தேதி தொடங்கும். ஒவ்வொரு குழுக்களுக்கும் 5 வாரம் கற்றல் நடைபெறும். இதற்காக 800க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து இளங்கலை மாணவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர்.
Comments
Post a Comment