CBSE - விரிவான பதிலளிக்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

நீட் தேர்வால் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


  இதுதொடர்பாக என்எச்ஆர்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வெழுத பல மாணவர்கள் தங்கள் மாநிலங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால், பலர் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதோடு, நீட்தேர்வுக்காக தனது மகனை தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அழைத்துச் சென்ற தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாகமுன்வந்து வழக்குப் பதிவு செய்கிறோம்.

மாணவர்கள் ஏன் வெளி மாநிலங்களுக்கு தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது என்பது குறித்து சிபிஎஸ்இ தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆகியோர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்னநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்