அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லைஎம்எல்ஏ செம்மலை (மேட்டூர்): அரசு பள்ளிகளில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என்று கூறுகிறார்.

அந்த நிலைமை வரக்கூடாது. சில அரசு பள்ளிகளில் 10 மாணவர்கள் தான்  படிக்கின்றனர். இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும். 

அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆட்சியில் பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மற்ற பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு அதிகமாக சேர்க்க பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 10 வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள 850 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். எனவே, பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!