அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரான புத்தகங்கள் இன்று வெளியாகிறது: நேற்றே கைடு விற்பனைக்கு வந்தது

 புதிய பாடத்திட்டத்தின் கீழ் 4 வகுப்புகளுக்கு மட்டும் தயாரிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் இன்று வெளியாக உள்ளது.
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதற்கான கைடுகளை தனியார் பதிப்பகம் நேற்றே விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு மட்டும் வரும் கல்வி ஆண்டில் புதியN புத்தகங்களை அறிமுகம் செய்யலாம் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு மேற்கண்ட குழு பரிந்துரை செய்தது.

அதன்படி மேற்கண்ட நான்கு வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடப்புத்தகம் அச்சிடப்பட்டன. நேற்று முன்தினம் இந்த புத்தகங்கள் முதல்வர் கையால் வெளியிட தயாராக பள்ளிக் கல்வித்துறை இருந்தது. ஆனால், அவசர பணி காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 1ம் தேதியே டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் 2ம் தேதி வெளியிட இருந்த புதிய புத்தகங்கள் இன்று வெளியாகிறது. இதற்கிடையே, புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை பின்பற்றி தனியார் பதிப்பகம் ஒன்று அனைத்து பாடங்களுக்கும் ‘‘ கைடு’’ தயாரித்து வெளியிட்டுள்ளது. நேற்று அந்த கைடுகள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளன

Comments