ஊதிய முரண்பாடுகளை நீக்க கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார் : இடைநிலை ஆசிரியர்கள் தகவல்சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எங்களை நேரில் சந்தித்து, ஊதிய முரண்பாட்டை களைய ஒரு நபர் குழு முயற்சி செய்யும் என்று உத்தரவாதம் அளித்தார். 


அவர் உத்தரவாதம் அளித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஒரு நபர் குழுவும் பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்து கேட்பதாக உறுதி அளித்துள்ளது. அப்போது எங்கள் ஊதிய முரண்பாடுகளை தெளிவுபடுத்துவோம். ஒரு நபர் குழு கண்டிப்பாக எங்களது ஊதிய முரண்பாட்டை சரி செய்யும் என்று அமைச்சரும் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்