"அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும்" ஆட்சியரிடம் மனு!

அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் பா.அண்ணாதுரையும், செயலாளர் ஜெகநேசனும் மனு அளித்தனர்.




இதுகுறித்து ஜெகநேசன் கூறுகையில் ‘மதுரை மாவட்டத்தில் பல்வேறு அரசுப்  பள்ளிகள் உள்ளன. ஆனால், அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை.

இதனால் கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை நீட் தேர்வுகள் வரை நீளுகிறது. எனவே, மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டம்வரை அனைவரும் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்க வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளியின் மீது மக்களுக்கு நல்ல நம்பிக்கை உருவாகும். அரசுப் பள்ளியை அரசு ஊழியர்கள் நன்றாக ஆய்வு செய்து கவனிப்பார்கள். 

அரசுப் பள்ளியில்தான் அதிக அளவு முதுநிலை பட்டதாரிகள் உள்ளனர். எனவே, அரசுப் பள்ளியை நாம் கண்காணிக்கும்போது நல்ல தரமான கல்விக்கூடமாக விளங்கும் என்ற நோக்கில் மனு அளித்தோம். 


மனுவைப் பெற்ற ஆட்சியர் நல்ல யோசனையாக உள்ளது இதற்குத் தனி டீம் அமைத்து ஆய்வு செய்கிறேன். இது சாத்தியப்படும், அரசுப்  பள்ளிகளுக்கு பெருமையைத்  தரும் என்றால் கண்டிப்பாக இதை நிறைவேற்றுவோம் அதற்கு 6 மாதம் தேவைப்படும் எனத் தெரிவித்தாக கூறினார். 

மேலும், தமிழக அளவில் இந்தத்  திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் அவர்களுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் அதன் செயலர்களுக்கு மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

Comments

  1. ஐயா, தமிழ்நாடு ஒரு மாநிலம் அங்கு முழுவதும் சுற்றி வர, படிக்க தமிழ் வேண்டும், இந்தியர் ஒரு நாடு, அங்கு முழுவதும் சுற்றி வர, படிக்க இந்தி ஒரு ஆட்சி மொழி ஆகவே இந்தி வேண்டும். உலகம் முழுவதும் சுற்றி வர, படிக்க ஆங்கிலம் தேவைப் Uடுகிறது. ஆகவே தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மொழி உள்ளது! இந்தி மொழி? தமிழகத்தில் இந்தி மொழியை அரசு பள்ளிகளில் ஒரு பாடமாக்க.. முயச்சி மேற்கொள்ளுங்கள்! பார்போம்! பிறரு அரசு ஊழியர் குழந்தைகள், அரசு பள்ளிகளில் படிப்பதை பற்றி! .......

    ReplyDelete
    Replies
    1. இது ஒரு காரணம் அல்ல.பதிவிடும் தாங்கள் எந்தப் பள்ளியில் படித்தவர் என எனக்குத் தெரியவில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்து தான் பட்டதாரித் தலைமை ஆசிரியராக உள்ளேன். 1998 இல் எனது மகன்கள் இருவரையும் அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்தேன். இன்று ஒருவர் மருத்துவராகவும் மற்றொருவர் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கான பயிற்சி வகுப்பிலும் சேர்த்து உள்ளேன். நமது திறமையை நாமே நம்பாவிட்டால் யார் நம்புவர். பகட்டான கட்டடங்களை அரசு ஊழியர், ஆசிரியர்கள் நம்பும் வரை மற்றவர்கள் நம்மை நம்ப மாட்டார்கள். எனவே ஓட்டை சட்டியாக இருந்தாலும் அதில் கொழுக்கட்டை வேக வைப்பதே நம் திறமை. எனவே அரசுப் பள்ளியில் சேர்த்து நம் மேல் விழுகின்ற ஏச்சுகளை முறியடிப்போம்.

      Delete

Post a Comment