சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற ஆசிரியர் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2014ம் ஆண்டில் நடத்திய சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வில் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் எழுதினர்.
அதில் 400 பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி நியமனம் ஏதும் பள்ளிக்கல்வித்துறை வழங்க முன்வரவில்லை. இதனால் மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் தங்களுக்கு உரிய பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
உண்ணாவிரதம் முதல் தீக்குளிப்பு போராட்டம் வரை 25க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் பணி நியமனத்துக்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
இதனால் மனம் ெவறுத்த மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் அலுவலக கட்டிடத்தில் நேற்று உண்ணாவிரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
Comments
Post a Comment