ரூ.569/-க்கு 3ஜிபி/நாள் பிளானை அறிமுகம் செய்த VODAFONE

தொடர்ந்து ஏர்டெல், ஜியோ,ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் தற்சமயம் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்க பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ நிறுவனம் கூடிய விரைவில் புதிய திட்டத்தை  அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்போது வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம இரண்டு புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி ரூ.569 மற்றும் ரூ.511 போன்ற திட்டத்தில் தினமும் 3ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 வோடபோன் ரூ.569/-திட்டம்: 

வோடபோன் ரூ.569/-திட்டத்தில் தினசரி 3ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்ததை 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாட்டு அளவுடன் வழங்கப்படுகிறது. 

வோடபோன் ரூ.511/-திட்டம் 

வோடபோன் அறிமுகம் செய்த ரு.511/-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி வீதம் 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் தினமும் 100எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என வோடபோன் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே அறிமுகம் செயத் திட்டம்: 


வோடபோன் நிறுவனம் ஏற்கனவே ரூ.549/-திட்டத்தில் தினசரி 3.5ஜிபி டேட்டா வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தை 28நாட்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். பின்பு ரூ.509/-திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தை 90நாட்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. 

ஜியோ: 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.448/-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 84நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பின்பு ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டத்தில் 2ஜிபி டேட்டா வீதம் 91 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர்டெல் ரூ.129/-திட்டம் 

ஏர்டெல் ரூ.129/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி வீதம் 4ஜி டேட்டா கிடைக்கிறது, பின்பு இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்