+2 முடித்து அரசுப் பணிதான் உங்கள் குறிக்கோளா.. ??? இதை படிங்க

பிளஸ் டூ ரிசல்ட்ஸ் லாம் வந்திருச்சி !... எந்த பக்கம் பாத்தாலும் “ பையன் என்ன மார்க் ? பொண்ண எங்க படிக்க வைக்க போறீங்க.. ??? எந்த காலேஜ் ? ன்னு ஆயிரம் கேள்விகள் .. பள்ளி முடிஞ்சு காலேஜ் சேரதுக்குள்ள  பிள்ளைங்கள  கரும்பு மெஷினுக்குள்ள புகுந்த கரும்பு மாறி சக்கையா பிழிஞ்சி வெளிய தள்ளிருவாங்க... 


பிளஸ் டூ முடிஞ்சு எல்லாருக்கும் எழற கேள்வி... என்ன படிக்கலாம் ? படிச்சா வேலை கிடைக்குமா ? எங்க படிக்கலாம்...  பசங்க எடுத்த மதிப்பெண்கள் கண்டிப்பா வாழ்க்கையை நிர்ணயிக்க போறது இல்ல.. ஆனா கண்டிப்பா காலேஜ் சேர்றத முடிவு பண்ணுது....


1100 Above எடுத்தவங்க பத்தி நா பேச போறது இல்ல... ஏன்னா டாப் காலேஜ்ல கிடைச்சு அப்டியே போயிருவாங்க.... எனவே 1100 க்கு கீழ் 700 வரை மதிப்பெண் எடுத்தவங்க தான் ரொம்ப குழம்பி இருப்பாங்க... 


கல்லூரி படிப்ப நம்ம வாழ்க்கை செட்டில் ஆகறதுக்கு தளமா மாத்திக்கணும்.... படிப்புக்கு ஏத்த வேலையும் அதே நேரத்துல நம்ம படிப்புக்கு மாறுபட்ட வேலைக்கும் தயார் ஆகர மாறி படிச்சாதான் இனி வேலை கிடைக்கும்... 


எனவே அரசுப் பணிக்கு குறிக்கோள் வைக்கிறவங்க கீழ்கண்ட விஷயங்களை மட்டும் மனசுல வச்சுகோங்க.. 


1. பொறியியல் தான் படிக்க போறோம்ன்னு முடிவு பண்ணிட்டா  Mechanical,Civil,Electrical சாய்ஸ் வச்சுகோங்க.. இந்த மூணும் Evergreen Fields of Engineering.. இத எடுக்குறதால என்ன விசேஷம் ன்னா நீங்க அரசாங்க வேலைகளுக்கு போட்டி போடும்போது IES,JE,TNEB போன்ற மத்திய மாநில அரசுகள் நடத்த கூடிய தேர்வுகளில் இந்த மூன்று துறைகளில் படித்தவர்களைத் தான் அதிகம் கேக்கிறார்கள்... எனவே இவர்கள் பொறியியல் சார்ந்த வேளைகளிலும் செல்லலாம்.. அங்க வேலை கிடைக்கலன்னா அரசு துறையில் பொறியியல் சார்ந்த தேர்வுகளில் போட்டியிடலாம்..  மேலும் ஐ ஏ எஸ் ஐ பி எஸ் போன்ற தேர்வுகளிலும் கலந்து கொள்ளலாம்.. எனவே ஒரே கல்லுல மூணு மாங்கா காத்துட்டு இருக்கு... கம்பியுட்டர் சயின்ஸ் க்கு அரசுத் துறைகளில் மற்ற மூன்று பிரிவைப் போல் கணினி பொறியியல் சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகம் கிடையாது..2. கலை பாடப் பிரிவுகளில் சேரணும்னு நினச்சா பி ஏ வரலாறு,தமிழ்,ஆங்கில இலக்கியம்,அரசியல் அறிவியல் படிக்கலாம்...இத வச்சி மேற்கொண்டு ஆசிரியப் பணிக்கு போகலாம்.. தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் படிச்சா மேற்கொண்டு இதழியல்,ஊடகம் போன்ற படிப்புகளுக்கும் செல்லலாம்.... இல்லன்னா போட்டித் தேர்வு தான்.. இவர்கள் மூன்று பேருமே  அரசு நடத்தும் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை தகுதியாக கொண்ட அனைத்து அரசு தேர்வுகளிலும் கலந்து கொள்ளலாம்.. 


3. அறிவியல் படிப்பவர்கள் .... கணிதம்,இயற்பியல்,வேதியியல் முதல் சாய்சா வச்சுகோங்க... ஏன்னா இந்த படிப்புக்கு எப்பவுமே டிமேண்ட் உண்டு.... ஏன்னா கணிதம் படித்தவர்களுக்கு ஆசிரியப் பணிக்கும் ஆராய்ச்சி பணிக்கும் வாய்ப்புகள் அதிகம்.. மேலும் அரசுத் துறையில் புள்ளியியல் ஆய்வாளர் என்ற பணிக்கு கணிதம் உதவும்..  மேலும் வங்கித் தேர்வுகளில் வாய்ப்பு உண்டு... இயற்பியல்,வேதியியல்  படித்த நபர்கள் இஸ்ரோ மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன.. இவர்கள் மூன்று பேருமே  அரசு நடத்தும் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை தகுதியாக கொண்ட அனைத்து அரசு தேர்வுகளிலும் கலந்து கொள்ளலாம்.. 4. Biotech,Bio Informatics etc etc என்ற சிறப்பு படிப்புகளில் சேரும் முன்  நூறு தடவை யோசிக்கவும்.. ஏன்னா மேற்கொண்டு ஆராய்ச்சிகளில் தான் வாய்ப்பு இருக்குமே தவிர வேலை வாய்ப்புகள் என்று வரும்போது கம்மி தான்... அதனால செலவு குறைச்சிட்டு அடிப்படை அறிவியலான தாவரவியல் மற்றும் விலங்கியல் படிப்புகளில் சேரலாம்... அடுத்த கட்டமாக ஆராய்சிகளில் ஈடுபடலாம்... ஏன்னா இன்னும் அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை சரியாக சொல்லித் தர ஆளே கிடையாது... டீச்சர் பணிக்கு ஏத்த படிப்பு... மேலும் இவர்கள் அரசு நடத்தும் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை தகுதியாக கொண்ட அனைத்து அரசு தேர்வுகளிலும் கலந்து கொள்ளலாம்.. 


5. வணிகம் படிக்க நினைப்பவர்கள் மேற்கொண்டு MBA படிக்க முயற்சி பண்ற மாறி ஜாயின் பண்ணுங்க.. முக்கியமா MBA (Human Resource ) க்கு அரசுத் துறைகளில் வாய்ப்பு அதிகம் இருக்கு.. ஆனா இன்னைக்கு இத படிச்சவங்க அரசு அலுவலகங்களில் ஆளே இல்ல.. ரொம்ப கம்மி தான் ... எனவே BBA படிப்பதை விட B.Com படிச்சா அரசுத் துறை தேர்வுகள் வங்கித் தேர்வுகளில் கலந்து கொள்ளும்போது வசதியா இருக்கும்.... MBA முடிக்கும் போது NLC,IOC,Coal India Limited Etc போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மேலாளர் பணிக்கு அதிக வாய்ப்பு உண்டு... இவர்கள் அரசு நடத்தும் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை தகுதியாக கொண்ட அனைத்து அரசு தேர்வுகளிலும் கலந்து கொள்ளலாம்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்