இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 104-இல் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுவதைத் தொடர்ந்து, தமிழக அரசின் 104 மருத்துவ சேவையில் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த ஆலோசனை 104 மருத்துவ சேவையிலும் 14417 என்ற பள்ளிக்கல்வித் துறையின் தகவல் மையத்திலும் 24 மணி நேரமும் வழங்கப்படும்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: பொதுத் தேர்வுகள் தொடங்கியதில் இருந்தே மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தனர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்