ஊதிய முரண்பாடு விவகாரம் மே 15க்குள் மனு அளிக்கலாம்

'அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு குறித்து, மனு அளிக்க விரும்புவோர், மே, 15க்குள் அளிக்க வேண்டும்' என, ஒரு நபர் குழுத் தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழு, பிப்., 20ல், அமைக்கப்பட்டது.

இக்குழு, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும். கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


சித்திக் தலைமையிலான குழு, ஊதிய முரண்பாடு தொடர்பான, கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறது. 'கோரிக்கை மனுக்களை, நேரிலோ, தபாலிலோ அல்லது இ - மெயில் முகவரி, omc_2018@tn.gov.in வழியாவோ, மே, 15க்குள், அனுப்ப வேண்டும்' என, அதன் தலைவர், சித்திக் தெரிவித்துள்ளார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்