முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு: 14 இடங்கள் நிரம்பின

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான  முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்.


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற முதல் நாள் கலந்தாய்வின் முடிவில் 14 இடங்கள் நிரம்பின.
எம்.டி., எம்.எஸ்., எம்.டிஎஸ். ஆகிய முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சனிக்கிழமை தொடங்கியது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 39 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடங்ளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 23 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கலந்தாய்வில் 19 பேர் பங்கேற்றனர்.
கலந்தாய்வின் முடிவில் 14 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர். 5 பேர் இடங்களைத் தேர்வு செய்யவில்லை.
மீதம் உள்ள 25 இடங்கள் அனைத்துப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கலந்தாய்வில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய கலந்தாய்வு: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (மே 20) நடைபெற உள்ளது. காலை 9, 11 பிற்பகல் 2 என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 1344 வரை, நீட் தேர்வு மதிப்பெண் 925 முதல் 591 வரை பெற்ற மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளது

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்