பி.எஸ்.என்.எல் வழங்கும் ஐ.பி.எல் ஆஃபர்!


ஐ.பி.எல். சீசன் தொடங்கியுள்ளதை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பேக் ஒன்றை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போல நடந்தேறி வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் ஏப்ரல் 7ஆம் தேதியன்று தொடங்கியுள்ளது. இந்தத் தொடரை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா ஆஃபர்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 153 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். தொலைக்காட்சிகளில் மட்டுமே இதுவரையில் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசித்து வந்த மக்கள் தற்போது ஸ்மார்ட்போன்கள் வழியாக ஹாட்ஸ்டார், ஸ்ட்ரீமிங் மூலமாகவும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். எனவே வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்த அதிரடி சலுகையை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்தச் சலுகை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 51 நாட்களுக்கு பயன்பாட்டில் இருக்கும்.முன்னதாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஐ.பி.எல். சிறப்பு அதிரடி சலுகையை அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்