பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு முகாம்

கோடை விடுமுறையை முன்னிட்டு 3 நாள் அஞ்சல் தலை சேகரிக்கும் முகாமை தபால் துறை நடத்த உள்ளது. சென்னை நகர தலைமை போஸ்ட் மாஸ்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் 27ம் தேதி வரை, மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மே 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை, 16 முதல் 18 வரை, மே 23ம் தேதி முதல் 25ம் ேததி வரை என 5 பிரிவுகளாக அஞ்சல் தலை சேகரிப்பு முகாம் நடைபெறும். இந்த 3 நாட்களும் மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் செயல்பாடு, அஞ்சல் தலைகள் பயன்பாடு, அஞ்சல் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும்.


இதற்காக கட்டணம் ரூ.250. அண்ணா சாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் இந்த முகாம் நடைபெறும். அண்ணா சாலை தபால் நிலைய வளாகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெறலாம். www.chennaipost.gov.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பம் உள்ளது. இவ்வாறு கூறபப்ட்டுள்ளது.  

Comments