குழந்தைகள் தின தேதியை மாற்ற 60 எம்.பி.,க்கள் கடிதம்!

ஆண்டுதோறும் நவ., 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் என்று குழந்தைகள்தினத்தை கொண்டாடுவதை விட்டு, டிச., 26ம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என, பிரதமர் மோடிக்கு, 60 எம்.பி.,கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மாமா தினம் கொண்டாடலாம்

மேற்கு டில்லி லோக்சபா தொகுதியின் பா.ஜ., - எம்.பி., பர்வேஷ் சாகிப் சிங் வர்மா என்பவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், 59 பா.ஜ., எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில் கூறியிருப்பதாவது**முன்னாள் பிரதமர் நேருவை, ' சாச்சா நேரு' அதாவது, 'மாமா நேரு' என்று தான் அன்புடன் குழந்தைகள் அழைத்து வந்தனர்*

எனவே, அவரது பிறந்த நாளை, ' மாமா தினமாக தான் கொண்டாடவேண்டும். அதற்கு பதில் சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்கள் வீர மரணம் அடைந்த டிச., 26ம் தேதியை தான் குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும்.

முகலாய மன்னர் ஓளரங்கசீப் ஆட்சியின் போது டிச., 26ம் தேதி குரு கோவிந்த் சிங்கின் மகன்கள், அஜித் சிங் (18), ஜூகார் சிங்(14), ஜோராவார் சிங்(9), பதேக்சிங்(7) ஆகியோர் கொல்லப்பட்டனர். அன்றைய தினத்தை தான் குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Comments