பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது;ஏப்., 6ல் முடிந்தது. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 7ல் துவங்கி, வரும், 13ல் முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், விடைத்தாள்திருத்தும் பணி, இன்று துவங்க உள்ளது. மொத்தம், 8.66 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து, மொத்தம், 60லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும். இதற்கானபணிகளில், 2.50 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.முதற்கட்டமாக, இன்று அனைத்துத் தேர்வு மையங்களிலும், தலைமை விடை திருத்துனர் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர், விடை திருத்தும் பணியில் ஈடுபடுவர்.
நாளை முதல், மற்ற விடை திருத்துனர்கள், இப்பணியில் ஈடுபட உள்ளனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 16ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மே முதல் வாரத்திற்குள், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணிகளை முடிக்க, அரசு தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், மே மாதம் வரை, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை நீட்டித்தால், அப்பணியைபுறக்கணிக்க போவதாக, ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Comments
Post a Comment