தனியார் பள்ளியில் 25 சதவீத சேர்க்கையால் அரசுப் பள்ளிகள் விரைவில் மூடப்படும் அபாயம்

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் 25 சதவீத சேர்க்கையால் அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் ஏழை மாணவர்கள் 25 சதவீதம் பேரை தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற நலிந்த மாணவர்களை, அவர்கள் விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு அரசு நிதி ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை அரசுப் பள்ளிகளுக்கு செலவு செய்திருந்தால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த செயல்முறையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்